Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டையால் அடித்து கல்லூரி மாணவி கொலை - பலாத்காரம் செய்யப்பட்டாரா?

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (03:17 IST)
நாகப்பட்டினம் அருகே கட்டையால் அடித்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

 
நாகை மாவட்டம் ஆக்கூர் அருகே அப்பராஜபுரம் புத்தூரில் வசித்துவருவர் தீபிகா (17). இவர் பூம்புகார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
 
இந்தநிலையில், நேற்று காலை அவரது வீட்டுக்கு அருகே உள்ள ராஜேந்திரன் வாய்க்காலில் தீபிகா பிணமாக கிடந்தது தெரியவந்தது. தகவல் தெரிந்ததும் பெற்றோரும், ஊர் மக்களும் போய் பார்த்தபோது சடலமாக கிடந்தது தீபிகா தான் என்பதை உறுதி செய்தனர்.
 
தகவல் அறிந்து, பொறையார் போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தீபிகாவின் உடலைப் பார்த்து பெற்றோர் கதறியழுதனர்.
 
தீபிகாவின் முகத்தில் பலத்த காயம் இருந்தது. எனவே அவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பலாத்கார முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments