ஹாஸ்டலில் தங்கி படித்த கல்லூரி மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

Siva
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (07:22 IST)
அரசு கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் ஹாஸ்டலில் தங்கி இருந்த நிலையில் அவருக்கு நேற்று திடீரென குழந்தை பிறந்தது சக மாணவிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி அருகில் உள்ள ஹாஸ்டலில் தங்கி இருந்த நிலையில் அவர் நேற்று திடீரென வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து சக மாணவிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவருக்கு நேற்று குழந்தை பிறந்தது. இதையடுத்து தான் சக மாணவிகளுக்கு அவர் இதுநாள் வரை கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது.

கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி அடைந்த ஹாஸ்டல் வார்டன் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கும் மாணவியின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த மாணவியிடம் விசாரித்த போது கடந்த சில ஆண்டுகளாக மனோஜ் என்பவர் உடன் அவர் பழகி வந்ததாகவும் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்ததால் அவர் கர்ப்பமாகி உள்ளதாகவும் அதன் காரணமாக தற்போது குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கல்லூரி மாணவி திடீரென குழந்தை பெற்றது அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோ.. கணவனே மனைவிக்கு அனுப்பியதால் விபரீதம்..!

சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வில் புதிய கட்டுப்பாடுகள்: மாணவர்கள் அதிர்ச்சி..!

இஸ்லாமிய சொந்தங்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்சநீதிமன்றம்.. விஜய் அறிக்கை

19 வயது இளைஞரின் மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் ஊசிகளை அடித்த கணவன் - மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அதிமுக வாக்குகள் எந்த காலத்திலும் விஜய்க்கு போகாது: ஜெயக்குமார்

அடுத்த கட்டுரையில்
Show comments