Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவி வெட்டிக்கொலை - காதலன் கைது

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (16:06 IST)
திருவண்ணாமலை ஆரணியில் ஒரு கல்லூரி பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆரணி அருகே உள்ள குண்ணத்தூரில் இருந்து கீழ்நகர் செல்லும் சாலையில் துர்மந்தாங்கல் ஏரிக்கரை உள்ளது. அந்த ஏரியில், கத்தியால் குத்தப்பட்ட நிலையில், ஒரு இளம்பெண்ணின் சடலம் அங்கு இருந்தது நேற்று தெரியவந்தது. இதையடுத்து, இதுபற்றி போலீசாரிடம் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், சடலமாக கிடந்த பெண்ணின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் அவர் பெயர் மோனிகா(20) என்பதும், அவர் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அக்ஸிலியம் மகளிர் கல்லூரியின் விடுதில் தங்கி, அந்த கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் படித்து வந்தார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவரின் மகள் என்பது தெரியவந்தது.
 
அவரின் பெற்றோர், கடந்த 2 நாட்களாக மகளை தொடர்பு கொள்ளமுடியாமல், கல்லூரிக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அவர் விடுதிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. எனவே, அதிர்ச்சியான பெற்றோர் அவரை பல இடங்களிலும் தேடி வந்தானர். இந்நிலையில்தான், மோனிகா கொலை செய்யப்பட்ட தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
 
இதுகுறித்த போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், கோகுல்நாத் என்ற இளைஞர் கடந்த 19ம் தேதி சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்னை காதலித்து வந்த மோனிகா, தன் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறியதால், கோபமடைந்து அவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments