Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை பட்டியலின இளைஞர் கொலை வழக்கு: 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!

Siva
திங்கள், 15 ஜூலை 2024 (13:56 IST)
கோவையில் கடந்த 2015ல் பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 
தல விக்கி, தோப்பு மகேந்திரன், டிப்ஸ் கார்த்திக், கவாஸ்கான் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை என்றும், அதேபோல் சுரேஷ், பிரகாஷ், நவீன், விமல், கௌதம், கலைவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை என்றும், கிறிஸ்டோபர், கருப்பு கௌதம் ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 
கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட மோதலில் அடித்து கொல்லப்பட்ட பட்டியலின இளைஞர் தாமரைக் கண்ணன் கொலை தொடர்பாக 14 பேர் வழக்கு பதிவு செய்தது கோவை காவல்துறை. 8 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரில் 10 பேருக்கு இரட்டை  ஆயுள், 2 பேருக்கு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments