Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி தற்கொலை ... ’ஐ லவ் யூ மெசேஜ் ‘ ஒரே நேரத்தில் இரண்டு காதல்! திடுக் தகவல்

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (16:03 IST)
கோவை மாவட்டம் பிகே புதூர் பகுதியில் வசித்து வந்தவர் கங்காதரன். இவரது மகள் சாரோ( பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பின்னர்,ஹேமாவின் அப்பா கங்காதரன் ,போலீஸ் ஸ்டேஷன் சென்று,  ’லவ் ஜிகாத்’ ஆகச் செயல்பட்டு காதல் தன் மகளை செய்யுமாறு மிரட்டிய இளைஞரை கைது செய்ய வேண்டுமென புகார் அளித்திருந்தார்.
 
மேலும் கங்காதரன், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து தன் வீட்டில் தன் மகள் எழுதியிருந்த கடிதத்தை போலீஸார் விசாரணைக்காக எடுத்துச் சென்றனர். தற்போது அவற்றைக் காட்ட மறுக்கிறது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வந்து இளைஞர்  மிரட்டல் விடுத்துள்ளார். அதனால்தான் என் மகள் தற்கொலை செய்தார் . அதனால் மகள் தற்கொலைக்கு காரணமான ஜாபரைக் கண்டுபிடித்து போலீஸார் உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.
 
இதனையடுத்து போலீஸார் சாரோ தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதில் போலீஸ் தரப்பில் கூறியுள்ளதாகச் சில தகவல் வெளியாகியுள்ளது.
 
அதில், தற்கொலை செய்துகொண்ட மாணவி ஒரே நேரத்தில் முகமது ஜாபர் மற்றும் அப்துல் அப்பாஸ் ஆகிய இரு இளைஞர்களைக் காதல் செய்துள்ளார். அப்பாஸைக் காதல் செய்தது ஜாபருக்குத்  தெரியாது. ஒரு சமயம் இவர்களின் காதல் ஜாபருக்குத் தெரிந்தது.
 
அதனால் பிரச்சனை கிளம்பியது. இதனால் மனமுடைந்த ஜாபர் சாரோவின் வீட்டுக்குச் சென்று சாரோவை மிரட்டியுள்ளார். பின்னர் தான் இருவரை காதலிப்பது வெளியில் தெரிந்துவிட்டதால் அவர் தற்கொலை செய்துகொண்டார். மாறாக இது லவ் ஜிகாத் அல்ல. சாரோ இரண்டு இளைஞர்களுக்கும் அனுப்பிய ஐ லவ் யூ என்ற வாட்ஸ் அப் மெசேஞ் எங்களிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டை அடுத்து கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்? அதிர்ச்சி தகவல்..!

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் : அமைச்சர் அமித்ஷா

இரவை குளிரவைக்க போகும் மழை! 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments