Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி..! – கோவையில் பேனரால் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:41 IST)
கோவை மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் இந்துக்கள் வாழும் பகுதி என பேனர் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் காடுவெட்டிபாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் ”எச்சரிக்கை! இங்கு இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி. இங்கு மத பிரச்சாரம் செய்யவும், மதக் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேனர் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத ரீதியாக வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் குறித்து அப்பகுதி அதிகாரிகள் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தேவையற்ற காழ்புணர்ச்சிகளை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments