Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடன் என நினைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம்.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்..!

Siva
புதன், 29 மே 2024 (14:36 IST)
கோவை தனியார் மருத்துவமனையில், திருடன் என நினைத்து சிகிச்சைக்கு வந்த நபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரபபி ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும்  போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் உடலை வாங்க மறுத்து, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மனைவி, உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
முன்னதாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ராஜா என்ற நபர் சிகிச்சைக்காக வந்ததாகவும், ஆனால் அவரை திருடன் என நினைத்து மருத்துவமனை காவலாளிகள் உட்பட ஊழியர்கள் சரமாரியாக அடித்து கொலை செய்துவிட்டனர் என்று ராஜாவின் மனைவி புகார் அளித்திருந்தார்.
 
இந்த புகாரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், காவலாளிகள் உள்பட சிலரை கைது செய்து வருகின்றனர்.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments