Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை: ஆட்சியர் அறிக்கை

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (22:34 IST)
கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் மற்றும் ‘வலிமை’ வைரஸ் பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் ஏற்கனவே சென்னை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் அதிக நபர்கள் கூடினால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் இரவு 12 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சென்னையை அடுத்து கோவை மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள் கேளிக்கை விடுதிகள், சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க திட்டம்.. தமிழக அரசு முடிவு

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பென்ட் ரத்து.. முதல்வர் தலையிட்டாரா?

தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்..! தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க கோரிக்கை..!!

தியானத்தில் இருந்து கொண்டே புயல் பாதிப்புகளை கேட்டறிந்த பிரதமர் மோடி! எப்படி சாத்தியம்? – நெட்டிசன்கள் கேள்வி!

ஒரே நேரத்தில் வானில் தெரியப்போகும் 6 கோள்கள் - எப்போது, எப்படி பார்க்கலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments