Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு: பற்றி எரிகிறது பெரியார் சிலை விவகாரம்

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (08:09 IST)

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஆட்சி குறித்த அதிருப்தி இருந்தாலும் ஓரிரு சம்பவங்கள் தவிர பொதுவாக அமைதிப்பூங்காவாகத்தான் தமிழகம் இருந்தது. ஆனால் நேற்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பெரியார் சிலை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பின்னர் தமிழகம் முழுவதும் ஒருவித பதட்ட நிலையே இருந்தது. அரசியல் தலைவர்களின் பேச்சில்கூட வன்முறை இருந்ததை காணமுடிந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு பகுதியில் பெரியாரின் சிலைகளை சேதப்படுத்தினர். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், இரண்டு பேர்களை கைது செய்திருந்தபோதிலும் அந்த பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் கோவை சித்தாபுதூர் என்ற பகுதியில் இயங்கி வந்த பாஜக அலுவலகம் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை மர்ம நபர்கள் வீசிவிட்டு மாயமாய் மறைந்துள்ளனர். இந்த வெடிகுண்டை இருவர் வீசியதாகவும் அவர்களை பிடிக்க போலீசார் வலைவீசியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பாஜக அலுவலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments