Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்த காமுகன்

Webdunia
புதன், 30 ஜூலை 2014 (10:25 IST)
கோவையில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்த காமுகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவையைச் சேர்ந்தவர் 37 வயதுடைய சக்திவேல். இவரது மனைவி மகேஸ்வரி கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல்துறையினரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், “எனக்கும், சக்திவேல் என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் சீதனமாக 7 சவரன் நகையைக் கொடுத்தனர்.

சக்திவேல் பெயின்டர் தொழில் செய்து வருகிறார். திருமணமான, சில மாதங்களில் சக்திவேலின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தினசரி இரவு எனக்கு செக்ஸ் தொந்தரவு கொடுக்க துவங்கினார்.

ஆபாச படங்களில் வருவது போல், செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து முன்னரே ஒரு முறை மேற்கு பகுதி மகளிர் காவல்துறையில் புகார் செய்தேன்.

காவல்துறையினர் எங்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். அதன் பின்னரும், சக்திவேல் செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் சக்திவேலுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, நான் அவரை விட்டு பிரிந்து எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன்.

இந்நிலையில் சக்திவேல், தனலட்சுமி என்ற பெண்ணை எனக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டு, நாங்கள் வசித்து வந்த வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதுகுறித்து நான் சக்திவேலிடம் கேட்ட போது, அவர் என்னை தகாத வார்த்தைகளில் திட்டி கொலைமிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“. இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து மேற்கு பகுதி மகளிர் காவல்துறையினர் சக்திவேலிடம் விசாரித்தனர். சக்திவேல், மகேஸ்வரியை திருமணம் செய்வதற்கு முன்னரே மேலும் சில பெண்களை திருமணம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து மேற்கு பகுதி மகளிர் காவல்துறையினர் கூறுகையில், “கோவையை சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும், சக்திவேலுக்கும் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

செக்ஸ் வைத்துக்கொள்வதில் முரண்பாடு ஏற்பட்டு சில மாதங்களிலேயே கவிதா அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். சில வருடங்கள் கழித்து காமாட்சி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவரும் சக்திவேலின் செக்ஸ் தொந்தரவை பொறுத்து கொள்ள முடியாமல் சில மாதங்களிலேயே பிரிந்து சென்றுவிட்டார்.

மூன்றாவதாக கெஜலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவரும் பிரிந்து சென்றுவிட்டார். அதன்பின், உறவினர்கள் சேர்ந்து 2013 ஆம் ஆண்டு 4 ஆவதாக மகேஸ்வரியை திருமணம் செய்து வைத்துள்ளனர். மகேஸ்வரியும் பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் தனிமையில் இருந்த அவர், தனலட்சுமி என்ற பெண்ணை ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளார். யாரையும் முறையாக விவாகரத்து செய்யவில்லை. முந்தைய திருமணங்களை மறைத்து ஒவ்வொரு பெண்ணையும் திருமணம் செய்துள்ளது விசாரணையில் தெரிந்தது“. என்று தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… இனி மழை எப்படி இருக்கும்?

நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… கொட்டித் தீர்த்த மழை!

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்