Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்களை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Siva
செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:50 IST)
ஸ்பெயினில்  இன்று முதலீட்டாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஸ்பெயின் நாட்டின் ரொகா, எடிபோன், சிஐஇ ஆகிய நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் இன்று ஆலோசனை  செய்கிறார். மேலும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு  வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் இந்த மாநாட்டில்  உலகில் முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில்  தொழிற்சாலைகளை அமைக்கவுள்ள உள்ளதாக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்தன.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள நிலையில் இன்று அவர் ஸ்பெயின் நாட்டின் முக்கிய தொழிலதிபர்களை சந்திக்கவுள்ளார்.

முன்னதாக நேற்று ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல் குறித்து தெரிவித்தார். மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

973 வாகனங்கள் ஏலம்.. முழு தகவல்களை வெளியிட்ட சென்னை காவல்துறை..!

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட முயல்வதா? அன்புமணி கண்டனம்..!

காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments