Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதை உறுதி செய்வோம்: முதல்வர் ஸ்டாலின்

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (19:02 IST)
தென் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதை உறுதி செய்வோம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: 
 
பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன;
 
அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்;
 
அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர்;
 
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனாவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்”
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள்.! அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..!!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments