Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் ஆர்.என்.ரவி கல்மனசுக்காரர்: மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை.. நீட் தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின்..!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (10:09 IST)
ஆளுநர் ஆர்.என்.ரவி போன்ற கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை என நீட் தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
ஒரு முறையல்ல, இரண்டு முறை நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். இரண்டாவது முறை அனுப்பி வைத்தால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். ஆனால் மசோதா கிடப்பில் போடப்பட வேண்டும் என்பதே ஆளுநர் ஆர்.என்.ரவியின் மோசமான எண்ணம்
 
ஆளுநர் ஆர்.என்.ரவி போன்ற கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை. நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனை தொடர்ந்து, அவரது தந்தையும் உயிரை மாய்த்து கொண்ட நிலையில் அந்த குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை
 
நீட் தேர்வு எனும் பலிபீடம் மேலும் ஒரு மாணவனின் உயிரை பறித்துள்ளது. தன்னம்பிக்கை கொள்ளுங்கள், எந்த சூழலிலும் உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம்’ என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் நரேந்திர மோடி! – அமித்ஷா, குமாரசாமி உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்பு!

தம்பிகள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்: கமல்ஹாசன் வாழ்த்து

பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.. சீமான்

இணை அமைச்சர் பதவியை மறுத்த அஜித் பவார் கட்சி! அமைச்சரவையில் இடம் இல்லை!

குலாப்ஜாமூனில் கரப்பான்பூச்சி.. IRCTC உணவால் பயணி அதிர்ச்சி! – வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments