Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40க்கு 40 போல், 200க்கும் மேல் இலக்கு.. தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

Mahendran
புதன், 12 ஜூன் 2024 (14:11 IST)
நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்றது போல் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் கூறியுள்ளார். 
 
கோவை முப்பெரும் விழாவை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 40 40க்கு 40 வென்றது போல் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் வெல்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பெரும்பாலான தொகுதிகளில் திமுக தான் அதிக வாக்குகள் வாங்கி உள்ளது என்பதும் ஒரு சில தொகுதிகளில் மட்டுமே அதிமுக அதிக வாக்குகள் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை வைத்து பார்க்கும் போது இப்போது சட்டமன்ற தேர்தல் வந்தால் நாடாளுமன்ற தேர்தலில் விழுந்த அதே வாக்குகள் திமுகவுக்கு விழுந்தால் 200 தொகுதிகளுக்கும் அதிகமாக கண்டிப்பாக வெற்றி பெறும் நிலை உள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். 
 
ஆனால் அதே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றும் மக்கள் உள்ளூர் பிரச்சனையில் அடிப்படையில் தான் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது,
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments