Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா படத்தை தீயிட்டு கொழுத்திய பொது மக்கள்

ஜெயலலிதா படத்தை தீயிட்டு கொழுத்திய பொது மக்கள்
, திங்கள், 14 டிசம்பர் 2015 (00:08 IST)
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் முதல்வர் ஜெயலலிதா படத்தை பொது மக்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.
 

 
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கடும் கனமழையால், காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளிக்கரணையில் உள்ள பாலாஜி நகர் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த பகுதியில் வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்கவில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
 
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ரூ. 2,000 மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் தருவதாக அதிமுகவினர் அறிவித்தனர். ஆனால், அவர்கள் கூறியபடி தராமல்,  ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை மற்றும் பிரெட் பாக்கெட் மட்டும் கொடுத்துவிட்டு, அதை போட்டோ எடுத்துக் விளம்பரத்திக் கொண்டனர்.
 
இதனால், கடும் கோபம் கொண்ட அந்த பகுதி பொது மக்கள் அதிமுகவினர் வழங்கிய நிவாரண அட்டையை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  தகவல் அறிந்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil