Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் பயணியை அறைந்தது அநாகரிகமானது - ஜெயலலிதா கண்டனம்

Webdunia
வியாழன், 2 ஜூலை 2015 (16:55 IST)
மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த பயணியின் கன்னத்தில் அறைந்தது அநாகரிகமானது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 

 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று 01-07-15 [புதன்கிழமை] சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவரின் கன்னத்தில் அறைவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பரவியது.
 
இந்நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, "அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும், வெற்று விளம்பரத்திற்காகவும் 01-07-2015 அன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஸ்டாலின், அந்த ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
 
இந்த செய்தியும், காட்சியும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். இது போன்று அநாகரிகமாக நடந்துகொள்வது சட்டமன்ற உறுப்பினருக்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பொது இடங்களில் எல்லோருக்கும் சம அளவு உரிமை உள்ளது என்பதையும், யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்பதையும் உணர்ந்து, சட்டமன்ற உறுப்பினரின் கண்ணியத்தை ஸ்டாலின் இனியாவது காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
 

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments