Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியாரும், எகிப்து வெங்காயமும்! - நெகிழும் செல்லூர் ராஜூ

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (12:55 IST)
எகிப்திலிருந்து வந்திருக்கும் வெங்காயம் குறித்த பொய்யான தகவல்கள் உலா வரும் நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள வெங்காய தட்டுப்பாட்டால் விலையும் அதிகரித்துள்ளது. வெங்காய தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு எகிப்து மற்றும் துருக்கியிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக எகிப்து நாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூர் சந்தைகளில் விற்பனையாகி வருகிறது.

ஆனால் இந்திய வெங்காயத்தை விட காரம் குறைவாக இருப்பதாலும், அளவில் பெரியதாக இருப்பதாலும் மக்கள் எகிப்து வெங்காயத்தை வாங்க தயங்குவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கிலோ 70 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வரும் எகிப்து வெங்காயம் குறித்து மேலும் சிலர் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்று தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் விற்பனை பாதிக்க காரணம் என கருதப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜு ”எகிப்து வெங்காயத்தில் சல்பர் இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும். எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது. எகிப்து வெங்காயத்தின் தன்மையை முதல்வரே அறுத்து சாப்பிட்டு பார்த்து பரிசோதனை செய்துள்ளார்” என கூறியுள்ளார்.

மேலும், எகிப்து வெங்காய வரவால் விலை குறைய தொடங்கியிருப்பதாகவும் மேலும் 25 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments