முதல்வர், கவர்னர் ஒருவரை ஒருவரை பாராட்டும் புதுவை அரசியல்!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:28 IST)
முதல்வர், கவர்னர் ஒருவரை ஒருவரை பாராட்டும் புதுவை அரசியல்!
தமிழகத்தில் முதல்வர் மற்றும் கவர்னர் ஆகிய இருவரும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக நீட் தேர்வு விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய பிறகு இந்த மோதல் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிட தக்கது
 
ஆனால் அண்டை மாநிலமான புதுவையில் முதல்வர் மற்றும் கவர்னர் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டு வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
புதுச்சேரி வளர்ச்சியடைந்த மாநிலமாக வளர்கிறது என்றும் முதல்வரின் அதிரடி திட்டங்களை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஆளுனர் தமிழிசை  தெரிவித்துள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமை எந்த விதத்திலும் புதுச்சேரியில் மறுக்கப் படாது மறைக்கவும் படாது என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை உறுதி கூறியுள்ளார் 
 
 அதேபோல் முதல்வர் பேசியபோது புதுவை அரசுக்கு துணை நிலை ஆளுநர் பல்வேறு விதங்களில் உதவியாகவும் உறுதுணையாகவும் இருக்கிறார் என்றும் அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
முதல்வர் மற்றும் கவர்னர் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments