Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவின் சுத்தமான நகரங்களின் பட்டியலில் திருச்சிக்கு 2 ஆவது இடம்

இந்தியாவின் சுத்தமான நகரங்களின் பட்டியலில் திருச்சிக்கு 2 ஆவது இடம்
, சனி, 8 ஆகஸ்ட் 2015 (19:19 IST)
இந்தியாவின் சுத்தமான நகரங்களின் பட்டியலில் திருச்சிக்கு 2 ஆவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் மைசூர் உள்ளது.
 
கழிவுகளை திறம்பட மறுசுழற்சி செய்வதன் அடிப்படையில் மத்திய அரசு சுவச் பாரத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 476 முதல் தர நகரங்களில் சுகாதார பணிகள் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை அடிப்படையாக கொண்டு இந்த சர்வே நடத்தப்பட்டது. குறிப்பாக, குடிநீர் தரம், அசுத்தமான தண்ணீரால் ஏற்படும் நோய்களால் இறப்போரின் சதவீதம், கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை முக்கியக் கூறுகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 
 
அதில், டாப்-10 பட்டியலுக்குள் இடம் பெற்ற நகரங்கள் பின்வருமாறு
 
மைசூர் (கர்நாடகா)
திருச்சிராப்பள்ளி (தமிழகம்)
நவி மும்பை
கொச்சி (கேரளா)
ஹாசன்
மாண்டியா
பெங்களூரு (கர்நாடகா)
திருவனந்தபுரம் (கேரளா)
ஹாலிசாகர் (மேற்கு வங்காளம்)
கேங்க்டாக் (சிக்கிம்)
 
இந்த பட்டியலில் தலைநகர் டெல்லியின் முனிசிபல் கார்ப்பரேஷன் 398 ஆவது இடத்தில் உள்ளது. மேற்கு வங்காள மாநிலம் 25 நகரங்களுடன் டாப்-100-க்குள் இடம்பிடித்துள்ளது. தென் மாநிலங்களில் இருந்து 39 நகரங்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன. கிழக்கிந்திய மாநிலங்களில் இருந்து 27 நகரங்களும், மேற்கு இந்திய மாநிலங்களில் இருந்து 15 நகரங்களும், வட இந்தியாவில் 12 நகரங்களும், வடகிழக்கு மாநிலங்களில் 7 நகரங்களும் இடம்பெற்றுள்ளன. 
 
எனினும், இந்த பட்டியலில் கர்நாடக மாநிலம் முன்னிலை வகிக்கிறது. பீகார் மாநிலம் மிகவும் பின்தங்கி 429 ஆவது இடத்தில் உள்ளது. இதுதவிர, மத்திய பிரதேசம், ஒடீசா மாநிலங்களும் இந்த பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil