பள்ளியில் மாணவனை கத்திரிகோலால் குத்திய சகமாணவன் ! அதிர்ச்சி சம்பவம்

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (17:33 IST)
கொடைக்கானல் பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரம் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் இரு மாணவர்கள்  படித்துவந்தனர். இதில் ஒரு மாணவர் தன் கையில் வைத்திருந்த கத்திரிகோலால் சகமாணவனை குத்தி  கொலை செய்த சம்பவம் பெரும் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோல்ப்  கிளப் அருகே பவான்ஸ் காந்தி என்ற உண்டு உறைவிட தனியார் பள்ளி இயங்கிவருகிறது. அங்கு 10 ஆம் வகுப்பில் படித்துவந்த கபில் ராகவேந்திரா என்ற மாணவனும் மற்றொரு சக மாணவனும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
 
இதில் அந்த மாணவனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆசிரியர்கள் அவனை கண்டித்துள்ளனர்.அதனால் அம்மாணவனுடன் பேசாமல் கபில் ராகவேந்திரன் விலகிச்சென்றுள்ளாகத் தெரிகிறது. தன்னுடம் ஏன் பேசவில்லை என்று காரணம் கேட்டு கபில் ராகவேந்திராவை வழிமறித்துள்ளான் அம்மாணவன்.
 
ஆனால் இதற்கு பதிலளிக்காமல் விலகிச்சென்றுள்ளான் கபில். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் தன் கையில் வைத்திருந்த கத்திரிக்கோலால் கபிலில் கழுத்தில் குத்தி கிரிக்கெட் ஸ்டெம்பால் தாக்கியதாகத் தெரிகிறது. இந்த தாக்குதலில் கபில் சம்பவ இடத்திலேயே பலியனான்.இதனால் பள்ளியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது இதைப் பயன்படுத்தி அம்மாணவர்  விடுதியை பள்ளியை விட்டு ஓடிச்சென்று,  வெளியில் சுற்றிக்கொண்டிருந்தான்.

இதையடுத்து அம்மாணவனை போலீஸார் பிடித்து விசாரித்து  பள்ளிக்கு தகவல் அளித்தபோது, அங்கு நடந்த கொலை குறித்து பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.பின்னர்  போலீஸார் அம்மாணவனை கைது செய்து விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகிறது. இசசம்பவம் அங்கு பெரும் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக்கிய அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. பதவி இழப்பாரா?

தமிழ்நாட்டில் மட்டும் 1 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கமா? சென்னையில் மட்டும் 40 லட்சமா?

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்.. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!

ஈரோடு மாநாட்டுக்கு பக்கா ஏற்பாடு.. விஜய்க்கு நல்ல பெயர் வாங்கி தருவாரா செங்கோட்டையன்?

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments