Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல்...6 பேர் காயம்

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (15:21 IST)
கடலூர் மாவட்டம் சாத்தப்பாடியில் மாரியம்மன் கோயிலில் மாசி மாதத் திருவிழாவின்போது இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சாத்தப்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி மகத் திருவிழா நடந்து வருகிறது. இத்திருவிழாவில் திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதில், தீர்த்ததவாரி சென்ற சாமி மீண்டும் ஊர்வலமான ஊருக்குத் திரும்பியுள்ளது. அப்போது. சாத்தப்பாடியைச் சேர்ந்தவர்களுக்கும், மேல்குணக்குடியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதல் ஏற்பட்டு,  இருதரப்பினரும் மோதிக் கொண்டனர்.

இந்தச் சண்டையில், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என மொத்தம் 6 பேர்  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில், இருகிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் தங்கள் ஊரைச் சேர்ந்தவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், இரு  மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டத்தை கலைந்துபோகுபடி கூறினர்.

பின்னர், மோதலில் காயமடைந்து, ஆம்புலன்ஸில் சென்றவர்களை சிலர் தாக்கும் வீடியோவும் வெளியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments