நடிக்காதடா, அழிஞ்சுபோயிடுவடா: தீபா, தீபக் நேருக்கு நேர் மோதல்!

நடிக்காதடா, அழிஞ்சுபோயிடுவடா: தீபா, தீபக் நேருக்கு நேர் மோதல்!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2017 (15:39 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மீண்டும் தனது கணவர் மாதவனுடன் போய்ஸ் கார்டன் வந்து தனது தம்பி தீபக்குடன் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.


 
 
இன்று காலை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு அவரது அண்ணன் மகள் தீபா சென்றார். அவரது தம்பி தீபக்கின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு சென்றுள்ளார். ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செலுத்து அழைத்ததாக கூறப்படுகிறது.
 
ஆனால் தீபா அங்கு தடுக்கப்பட்டதாகவும், உள்ளே உள்ள பாதுகாவலர்களால் தான் அடித்து துறத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தீபக் சசிகலாவுடன் சேர்ந்து இந்த சதி செயலில் ஈடுபட்டதாக தீபா கூறினார்.
 
தனது அத்தையுமான ஜெயலலிதாவை தமது சகோதரர் தீபக்கும் சசிகலாவும் சேர்ந்து பணத்துக்காக கொன்றுவிட்டதாக ஒரே போடாக போட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் பிற்பகலில் மீண்டும் தீபா போயஸ் கார்டன் சென்று தீபக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
அப்போது, நடிக்காதடா தீபக், அழிஞ்சுபோயிடுவடா, ஏமாத்ததடா, மாதவனுக்கு ஏதாவது ஆனால் நீதான் பொறுப்பு. உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என சரமாரியாக சாடியதாக தகவல்கள் வருகின்றன. தீபாவை போலீசார் சமாதானம் செய்தும் தீபா விடாப்பிடியாக போஸ்கார்டனில் தீபக்குடன் மோதலில் ஈடுபட்டதால் போயஸ்கார்டனில் மீண்டும் பரபரப்பு ஏறபட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்!.. 2026-ல் கூட்டணி நீடிக்குமா?..

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நாளை தீர்ப்பு! பெரும் எதிர்பார்ப்பு..!

வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய திடீர் ராணுவ தாக்குதல்.. இந்தியா கவலை..!

கனிமொழி பிறந்த நாள்.. தவெக தலைவர் விஜய், மத்திய அமைச்சர் அமித்ஷா வாழ்த்து.. அரசியல் நாகரீகமா? எதேனும் உள்குத்தா?

திமுகவின் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments