Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்.. சித்ராவின் தந்தை புதிய மனு தாக்கல்..!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (14:45 IST)
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
சித்ராவின் தந்தை காமராஜ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சித்ராவின் தந்தை இந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
விசாரணையை இழுத்து அடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேமந்த் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும் சித்ராவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
 
முதுமை காரணமாக வழக்கு விசாரணைக்காக ஒவ்வொரு வாய்தாவின் போது தன்னால் திருவள்ளூர் சென்று வர சிரமமாக இருப்பதாகவும் சித்ராவின் தந்தை தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு மீதானவிசாரணை விரைவில் நடைபெற உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments