Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு ரசிகர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது: சின்மயி

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (12:45 IST)
மீடு குற்றச்சாட்டில் கவிஞர் வைரமுத்து, ராதாரவி, அர்ஜூன் உள்ளிட்ட பலர் குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில் லேட்டஸ்ட்டாக நடிகை லேகா வாஷிங்டன் சிம்பு மீது மறைமுகமாக மீடு குற்றச்சாட்டை தனது டுவிட்டரில் தெரிவித்தார். இந்த டுவீட்டுக்கு சிம்பு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

சிம்பு திரையுலகில் வெற்றி பெற்று வரும் ஒரு சக்ஸஸ்புல் நடிகர் என்றும், ஒருசில சினிமாவுடன் தோல்வி அடைந்த லேகா, பொறாமையால் சிம்பு மீது வீண்பழி போடுவதாகவும் சிம்பு ரசிகர்கள் பதிவு செய்தனர்

இந்த நிலையில் மீடூ பிரச்சனையை தமிழ் திரையுலகில் தொடங்கி வைத்த சின்மயி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். லேகா வாஷிங்டனை பார்த்து ஒருசிலர் தோல்வி அடைந்தவர் என்று கூறுகின்றனர். அதனை கேட்டால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. லேகா ஒரு வெற்றிகரமான கலை அம்சங்கள் கொண்ட பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் பல அற்புதமான பொருட்களை விற்பனை செய்து வருகிறது என்று கூறியுள்ளார்.

ஒரு நடிகையாக இல்லாவிடினும் ஒரு தொழிலதிபராக அவர் வெற்றி பெற்றுள்ளார் என்றும், அப்படியே தோல்வி அடைந்தவராக இருந்தாலும் 'மிடூ'வில் குற்றச்சாட்டு சொல்லக்கூடாதா? என்றும் டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments