Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகள் மற்றவர்கள் செய்யும் குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடாது-அன்புமணி ராமதாஸ்

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (14:54 IST)
சென்னையில் பள்ளிகளைச் சுற்றி புகைப்பது அதிகரித்திருப்பதால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுவருவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தர்மபுரி எம்பியும், பாமக தலைவருமான  அன்புமணி ராமதஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''சென்னையில் பள்ளிகளை சுற்றியுள்ள பொது இடங்களில் புகைப்பது அதிகரித்திருப்பதாகவும், அதனால் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் சிகரெட் புகையை சுவாசித்து பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

ALSO READ: பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
 
இது பெரும் கவலையளிக்கிறது! ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மற்றவர்கள் செய்யும் குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடாது. அதற்காகத் தான் நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, பல்வேறு தடைகளைத் தகர்த்து பொது இடங்களில் புகைக்க தடை விதிக்கும் சட்டத்தை  நிறைவேற்றினேன்'' என்று தெரிவித்துள்ளார்.

#BanOnPublicSmoking

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments