Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக் காதலை கண்டித்ததால் பக்கத்து வீட்டுக்காரர் குழந்தையைக் கொன்ற ஜோடி

கள்ளக் காதலை கண்டித்ததால் பக்கத்து வீட்டுக்காரர் குழந்தையைக் கொன்ற ஜோடி

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2016 (20:03 IST)
கடந்த 23-ஆம் தேதி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள சித்தேரியைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரது 4 வயது மகன் நீத்தீஷ் வீட்டின் கழிவறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தான்.


 
 
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் இதில் முருகேசன் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பரமேஸ்வரியும், அவரது கள்ளக்காதலர் அருள்ராஜும் சேர்ந்து முருகேசனின் 4 வயது குழந்தையை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
 
பரமேஸ்வரியின் கணவர் ராமர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். பரமேஸ்வரிக்கும், அருள்ராஜுக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. பரமேஸ்வரியும், அருள்ராஜும் உல்லாசமாக இருந்ததை, பக்கத்து விட்டு முருகேசன் பார்த்து விட்டார், இதனால் அவர்களை கடுமையாக அவர் கண்டித்தார்.
 
இதனால் ஆத்திரமுற்ற பரமேஸ்வரியும், அருள்ராஜும் அவரை பழி வாங்க நினைத்து, அவரது 4 வயது மகன் நித்தீஷை கொலை செய்து, கழிவறையில் போட்டுள்ளனர். பரமேஸ்வரியிடமும், அருள்ராஜிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் வாழ்க என கோஷமிட்ட அதிஷி சஸ்பெண்ட்.. டெல்லியில் பரபரப்பு..!

என்னை தாண்டி இந்திய திணிச்சிடுவீங்களா? திடீரென இந்தி எதிர்ப்பில் குதித்த சீமான்!

ரயில்வே துறை எச்சரிக்கையை மீறி இந்தி எழுத்துக்கள் அழிப்பு.. நெல்லையில் பரபரப்பு..!

சென்னை - பெங்களூரு பயண நேரம் 30 நிமிடங்கள் தான்.. வருகிறது ஹைப்பர்லூப் ரயில்..!

மூடப்படுகிறதா பூந்தமல்லி பேருந்து நிலையம்.. புதிய பேருந்து நிலையம் எங்கே?

அடுத்த கட்டுரையில்
Show comments