Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை; தவறி விழுந்த டிவி! – தாம்பரத்தில் சோக சம்பவம்!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (13:39 IST)
சென்னை தாம்பரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது டிவி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள சேலையூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மூன்று வயது குழந்தை கவியரசு. நேற்று வீட்டு ஹாலில் கவியரசு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் யாரும் கவனிக்காத சமயத்தில் திடீரென தொலைக்காட்சி பெட்டி கவியரசு மீது விழுந்துள்ளது.

சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் உடனடியாக கவியரசை காப்பாற்ற முயன்றுள்ளார்கள், ஆனால் தொலைக்காட்சி விழுந்ததில் பலத்த அடிப்பட்டதால் குழந்தை கவியரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து கவியரசின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை துரதிர்ஷ்டவசமாக தொலைக்காட்சி பெட்டி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

முஸ்லீம் என்பதால் கொலை செய்தேன்.. 10 ஆண்டுகள் காதலித்த பெண்ணை கொலை செய்த வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments