Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீர் மாற்றம்! என்ன காரணம்?

Siva
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (09:05 IST)
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீரென மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசின் 49 வது  தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்ற நிலையில் நேற்று நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

இந்த விழா முடிந்த சில மணி நேரத்தில் அவர் தலைமை செயலாளர் பதவியில் இருந்து சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்டதாகவும் அவருக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாணை வெளியானது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவதாஸ் மீனா கடந்த 1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று பல்வேறு பதவிகளை வகித்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பதவியேற்றார். அவர் திடீரென மாற்றப்பட்டதற்கு என்ன காரணம் என தெரியவில்லை.

இந்த நிலையில் முதல்வரின் செயலாளராக இருக்கும் முருகானந்தம் என்பவர் அடுத்த தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments