Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்: ரஜினிக்கு முதல்வர் வாழ்த்து!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (11:45 IST)
இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கேவின் பெயரால் ஆண்டுதோறும் இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்த ஆளுமைகளுக்கு தாதா சாகேப் பால்கே விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
 
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த்க்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “இந்திய சினிமாவில் முக்கிய பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் விருது அறிவிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார். 
 
இதையடுத்து ரஜினிக்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். அடுத்ததாக தமிழ முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தியுள்ளார். 
 
மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், " தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த்  அவர்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன். திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது.  தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ  இறைவனை பிரார்த்திக்கிறேன். என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments