Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய முதல்வர் முக. ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (14:26 IST)
இயக்குனர் மணிரத்னத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார்.

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம். இவர், பல்லவி அனுபல்லவி என்ற படத்தின் மூலம்  சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர், இதய கோவில், பகல் நிலவு, மெளனராகம், நாயகன்ம் தளபதி, ரோஜா, காற்றுவெளியிடை, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

சமீபத்தில், இவர் இயக்கத்தில், பொன்னியின் செல்வன்-1, 2 ஆகிய படங்கள்  வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றன.

இந்திய சினிமாவில் உள்ள நட்சத்திரங்கள்  மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று விரும்புவர்.

அந்த வகையில், ஒவ்வொரு படத்திலும் தன் திறமையைக் காட்டி, இந்திய சினிமாவை சர்வதேச தரத்திற்கு உருவாக்குவதில் மணிரத்னம் புகழ்பெற்றவர்.

இன்று அவரது 66வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் முக.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘’இந்தியாவின் தலைசிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் திரு. மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் போற்றும் படைப்புகளைத் தொடர்ந்து படைத்திட வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments