சோசியல் மீடியா காதல்; வீடியோ எடுத்து மிரட்டல்! – சிக்கிய இன்ஸ்டாக்ராம் ஆசாமி!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (09:12 IST)
சிதம்பரத்தில் பெண்களை சமூக வலைதளம் மூலமாக காதலில் வீழ்த்தி ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியையின் மகள் ஒருவர் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கும் மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் அடிக்கடி சாட் செய்து வந்துள்ளார். இதன் மூலம் சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய ஜெயக்குமார் சிறுமி வீட்டில் ஆள் இல்லாத போது சென்று அவரை பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அடிக்கடி தனக்கு இணங்குமாறு மிரட்டியும் வந்துள்ளார்.

இவ்வாறாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் ஜெயக்குமார். அந்நேரம் சிறுமியின் தாய் வீடு திரும்பிய நிலையில் சிறுமி நடந்தவற்றை சொல்லி ஜெயக்குமார் படுக்கையறையில் பதுங்கி இருப்பதையும் கூறியுள்ளார். உடனே ஆசிரியை அக்கம்பக்கத்தினரை அழைக்க, தகவலறிந்த காவல் துறையினர் ஜெயக்குமாரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் இதுபோல பல பெண்களை படமெடுத்து ஜெயக்குமார் மிரட்டியதாக தெரிய வந்துள்ளது. அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்.. அவருடன் இணைவது யார் யார்?

60 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பணியில் இருந்த சிறப்பு காவல் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 500 வீரர்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments