Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை காப்பாற்ற 4 மணி நேரத்தில் திருச்சி டூ சென்னைக்கு சீறிப்பாய்ந்த ஆம்புலன்ஸ்கள்

ambulance
Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (20:29 IST)
பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையை காப்பாற்ற திருச்சியில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் ஒன்று 4 மணி நேரத்தில் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு இதயநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழந்தையை காப்பாற்ற வேண்டுமென்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று குழந்தையின் பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்

இதனையடுத்து சென்னைக்கு குழந்தையை எடுத்து செல்ல அதிநவீன ஆம்புலன்ஸ் தயாரானது. மேலும் ஆம்புலன்ஸ்கள் சங்கத்தின் வாட்ஸ் அப் குரூப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் போக்குவரத்தை சரிசெய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது

இதனையடுத்து திருச்சியில் இருந்து சென்னை வரை ஆங்காங்கே சுமார் 15 ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முன் செல்ல, குழந்தையுடன் கூடிய ஆம்புலன்ஸ் அதன் பின்னால் சென்றூ 4 மணி நேரம் 10 நிமிடங்களில் திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தது. தற்போது குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் இதற்கு உதவி செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி என்று குழந்தையின் பெற்றோர்கள் கண்ணில் மல்க தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments