சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவது எப்போது? ரயில்வே அதிகாரிகள் தகவல்..!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (13:28 IST)
சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது எப்போது என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 
ஏற்கனவே சென்னை - மைசூர் மற்றும் சென்னை - கோவை ஆகிய நகரங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் சென்னை-நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளது. 
 
சென்னை-நெல்லை  இடையே வந்தே பாரத் ரயில் கடந்த மாதமே தொடங்க திட்டமிடப்பட்டு இருந்ததுஆனால் தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதால் ஆகஸ்ட் மாத இறுதியில் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனார்.  
 
எனவே அடுத்த மாதம் சென்னை-நெல்லை இடையிலான  வந்தே பாரத் ரயில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

மெட்ரோ ரயிலுக்குள் பிச்சைக்காரர்கள்.. அதிருப்தியில் பயணிகள்..

புதிய முதலீடு குறித்து எதுவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசவில்லை: பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு..!

ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments