சென்னை – திருப்பதி இடையே முன்பதிவில்லா ரயில்! – பயணிகள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (10:19 IST)
சென்னை – திருப்பதி இடையே மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை – திருப்பதி இடையே கொரோனாவுக்கு முன்பு வரை மின்சார ரயில் சேவை இருந்து வந்தது. கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின் இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. மீண்டும் திருப்பதி வரை மின்சார ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தெற்கு ரயில்வே தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை செண்ட்ரல் – அரக்கோணம் இடையே இயங்கும் மின்சார ரயில் (06727) திருப்பதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது.

ALSO READ: தொடர்ந்து சரியும் தங்கம் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

சென்னை செண்ட்ரலில் இருந்து காலை 9.50க்கு புறப்படும் ரயில் பிற்பகலில் திருப்பதி சென்றடையும். திருப்பதியில் இருந்து பின்னர் புறப்பட்டு மாலை 5.15க்கு சென்னை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments