ஒரு ரூபாய் காணிக்கை செலுத்திவிட்டு மொத்த உண்டியலையும் அபேஸ் செய்த திருடன்

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (18:30 IST)
ஒரு ரூபாய் காணிக்கை செலுத்திவிட்டு மொத்த உண்டியலையும் அபேஸ் செய்த திருடன்
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்த திருடன் ஒருவன் அங்கு உள்ள உண்டியலில் ஒரு ரூபாய் காணிக்கை செலுத்திவிட்டு அந்த உண்டியலில் இருந்த மொத்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னையில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில். இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருவது உண்டு. இந்த கோவிலின் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ஆயிரக்கணக்கில் செலுத்துவார்கள்
 
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கோவிலை மூடிவிட்டு நிர்வாகிகள் சென்ற பின்னர் அதிகாரிகள் மீண்டும் இன்று காலை கோவிலை திறந்த போது இந்த கோயிலில் இருந்த இரண்டு உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது
 
காவல்துறையினர் விரைவாக வந்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கோவில் உண்டியலை ஒரு திருடன் உடைத்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் உண்டியலை உடைக்கும் முன்னர் அந்த திருடன் ஒரு ரூபாய் காணிக்கை செலுத்தியதும் அந்த சிசிடிவி காட்சிகள் உள்ளது 
 
ஒரு ரூபாய் காணிக்கை செலுத்திவிட்டு அந்த உண்டியலை உடைத்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்த பணத்தை அபேஸ் செய்து சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments