Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கோடை வெயில் 112 டிகிரிவரை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2015 (13:37 IST)
கோடை காலத்தில் சென்னையில் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காற்றின் ஈரப்பதம் குறைவதால் வெப்பம் அதிகரிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
தற்போது சராகரியாக 95 டிகிரிக்கு மேல் வெயில் அடிப்பதாகவும் கோடை காலத்தில் சென்னையில் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் சேலம், வேலூர், திருச்சி, பாளையங்கோட்டை முதலிய இங்களில், வெயிலின் தாக்கம், இதைவிட அதிகம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோடை மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments