Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சில்க்ஸ் தீ விபத்து; கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்தது

Webdunia
புதன், 31 மே 2017 (19:45 IST)
சென்னை தி. நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் கட்டிடத்தின் முன்பகுதி சுவர் இடிந்து விழுந்தது.


 

 
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இன்று காலை 4 மணியளிவில் தீ பற்றியது. முதலில் அடித்தளத்தில் பற்றிய தீ, படிப்படியாக மற்ற தளங்களுக்கும் பரவியது. தற்போது அந்த கட்டிடத்தில் உள்ள 7 தளங்கலிலும் தீ பற்றி எரிகிறது. ஒரே புகை மூட்டமாக இருப்பதால், தீயணைப்பு வீரர்களால் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர்.
 
ஒரு வழியாக தீயணைப்பு படையினர் கட்டிடத்தின் பின் பக்கம் உள்ள சுவரை உடைத்து உள்ளே தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இந்நிலையில் கடையின் முன்பகுதி சுவர் இடிந்து விழுந்தது. 15 மணி நேரமாக தொடர்ந்து தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். தற்போது வரை கட்டிடத்தில் தீ புகைந்து கொண்டே இருக்கிறது. தீயை அணைக்கும் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 
 
மேலும் காற்று வேகமாக வீசுவதால் தீ பரவக்க்கூடும் என சுவர் இடிந்து விழுந்த பகுதியில் காவல்துறையினர் யாரையும் அனுமதிக்காமல் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments