சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (14:54 IST)
சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை ஈடு கட்டும் வகையில் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 
 
இந்த நிலையில் நாளை அதாவது மார்ச் 11ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு திங்கட்கிழமை பாட வேலையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி பள்ளிகள் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

 
மேலும் மார்ச் 13ஆம் தேதி அன்று தொடங்கப்பட உள்ள மேல்நிலைப் பொது தேர்வுக்கான அனைத்து தேர்வு மைய தயாரிப்பு பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்யுமாறு அனைத்து உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...

அட இதுக்கே நாக்கு தள்ளுதப்பா? திரையுலகிலும் தேர்தலை சந்திக்கும் விஜய்..

ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய நிறுவனத்திற்கு தடை: அமெரிக்கா அதிரடி..!

சென்னையில் நடந்த அமலாக்கத்துறை சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம், நகை எவ்வளவு?

2 நாட்கள் உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments