Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 24 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (08:26 IST)
சென்னையில் 24 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாகவும், பிற பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக தீபாவளி விடுமுறைக்குப் பிறகு சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு வாரம் விடுமுறை வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் சென்னையில் 24 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் விவரம்:-
 
அரசு மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம்.
அரசு மேல்நிலைப் பள்ளி, வேளச்சேரி.
அரசு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி, ஆசிர்வாதபுரம், பிராட்வே.
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம்.
அரசு உயர்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம்.
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.
சென்னை நடுநிலைப் பள்ளி, அரும்பாக்கம்.
சென்னை தொடக்கப் பள்ளி, கோயம்பேடு.
சென்னை தொடக்கப் பள்ளி, பஜார் சாலை, சைதாப்பேட்டை.
சென்னை நடுநிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர். நகர்.
சென்னை நடுநிலைப்பள்ளி, திடீர் நகர், சைதாப்பேட்டை.
ராணி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.
ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.
மேரி கிளப்வாலா ஜாதவ் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர்.
கோட்டி எம்.அப்புச்செட்டி உயர்நிலைப்பள்ளி, ஓட்டேரி.
புனித பிரான்சிஸ் சேவியர் உயர் நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை.
அரசு தொடக்கப் பள்ளி. சிட்கோ நகர், வில்லிவாக்கம்.
அம்பத்தூர் லயன்ஸ் கிளப் நடுநிலைப்பள்ளி, சாலிகிராமம்.
திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி, சைதாப்பேட்டை.
அட்வெண்ட் கிறிஸ்டியன் தொடக்கப்பள்ளி, வேளச்சேரி.
சபேசன் பால பிருந்தா தொடக்கப்பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.
புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளி, சின்னமலை.
புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளி, ஆயிரம் விளக்கு.
சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, ஆயிரம் விளக்கு.
ஆகிய 24 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments