Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சுரங்கப்பாதைகளில் இருக்கும் நீரை அகற்றும் பணிகள் தீவிரம்…!

vinoth
ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (07:38 IST)
வங்கக் கடலில் தோன்றிய ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைப் பெய்து வருகிறது. சென்னையில் ஒரே நாளில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறி தத்தளித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த புயல் பாண்டிச்சேரி அருகே கரையைக் கடந்தது. அப்போது அதிகபட்சமாக 80 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசியுள்ளது.

இந்நிலையில் சென்னையில்  நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சென்னை பல தீவுகள் போல காட்சியளித்தது. முக்கியமாக மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் சுரங்கப் பாதைகள்  தண்ணீரால் நிரம்பி காணப்பட்டன.

இந்நிலையில் இப்போது தண்ணீரை அகற்றும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள அரங்கநாதர் சுரங்கப்பாதையில் இருந்த தண்ணீர் முழுவதும் அகற்றப்பட்டு தற்போது போக்குவரத்துக்குத் தயாராக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. அடித்து சொன்ன விஜய்..!

பாசிச பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை: தவெக தலைவர் விஜய் உறுதி..!

பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!

திமுக, அதிமுக கொள்கையில் திசைமாறிவிட்டன! விஜய்யால் மட்டும்தான் இனி விடிவுக்காலம்?! - ஆதவ் அர்ஜூனா!

ராஜா நீங்கதான்.. உங்க தளபதி யாரு? - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments