Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் சொந்த பையன் அஸ்வின்..! 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!!

Senthil Velan
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (17:53 IST)
டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

தற்போது மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு:
 
அஸ்வின் சாதனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சாதனைகளை உடைத்து கனவுகளை நனவாக்கும் சென்னையின் சொந்த பையன் அஸ்வின் என புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒவ்வொரு திருப்பத்திலும் அவர் உறுதிப்பாடு மற்றும் திறமையின் கதைகளை பின்னுகிறார் என்றும் இது ஒரு உண்மையான மைல் கல்லைக் குறிக்கிறது என்றும் முதல்வர் கூறியுள்ளார். 

ALSO READ: சிறைகளில் பெண் கைதிகள் கர்ப்பமாகும் விவகாரம்..! தானாக முன்வந்து விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!!

கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை சிறப்பாக பெற்ற அஸ்வினின் மாயாஜால சுழலுக்கு வாழ்த்துக்கள் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

ஆகமம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. இளையராஜா விவகாரம் குறித்து ஆன்மீக பேச்சாளர்..

நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... ஆண்டாள் கோவில் சம்பவம் குறித்து இளையராஜா

ஆரஞ்சு அலர்ட் மட்டுமின்றி ஆப்பிள் அலர்ட்டுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments