Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 மணி நேர சாதனையை 26 மணி நேரத்தில் செய்து கின்னஸ் சாதனை படைத்த சென்னை வாலிபர்

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2016 (16:55 IST)
ஆஸ்ரேலியாவை சேர்ந்த வாலிபர்  மாரத்தான் ஐயர்னிங் மூலம் 100 மணி நேரத்தில் 2000 துணிகள் ஐயர்னிங் செய்து கின்னஸ் சாதனை படைத்தார்.
 

 
இவரின் சாதனையை முறியடிக்க சென்னை வாலிபர் டேனியல் சூர்யா 101 மணி நேர மராத்தான் ஐயர்னிங் நிகழ்ச்சியை சென்னை ஸ்பென்சர் பிளாசா அரங்கில் 25ஆம் தேதி காலை தொடங்கினார்.
 
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்த சாதனை நிகழ்ச்சியை லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பிரமாண்டமான முறையில் செய்திருந்தார்கள்.
 
நேற்று காலை தொடங்கிய சாதனை நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் மதியம் 1 மணிக்கு கின்னஸ் சாதனையான 2000 துணிகளுக்கு மேல் ஐயர்னிங் செய்து டேனியல் சூர்யா புதிய உலக சாதனை படைத்தார்.
 
முதல் முறையாக வெளிநாட்டினர் செய்த கின்னஸ் சாதனையை இந்தியர் அதிலும் குறிப்பாக சென்னை வாலிபர் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே இருந்த கின்னஸ் உலக சாதனையை டேனியல் சூர்யா முறியடித்த பிறகும் தொடர்ந்து ஐயர்னிங் செய்து வருகிறார். தொடர்ந்து 5 நாட்கள் இந்த சாதனை செய்ய இருக்கிறார். இந்த 5 நாளில் சுமார் 1 கோடி பேர்களிடம் கண் தான உறுதிமொழி பெற வேண்டும் என்பதே இவர் விருப்பமாம். 
 
இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவருமான தியாகராஜா கூறும்போது, ”கண் தான விழிப்புணர்வை வலியுறுத்தி இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாதனை நிகழ்ச்சி முடியும் போது ஒரு கோடி பேராவது கண் தான உறுதி தர வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். 
 
முதல் முதலாக வெளிநாட்டினர் செய்த கின்னஸ் சாதனையை ஒரு இந்தியர் குறிப்பாக தமிழர் முறியடித்ததை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்” என்றார் தியாகராஜா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இந்தியா நம்மள நல்லா யூஸ் பண்ணிக்கிறாங்க..! - அதிபர் ட்ரம்ப் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments