Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சாலைகளில் திடீர் எண்ணெய் படலம் ஏன்? புரியாத புதிர்

Webdunia
புதன், 10 மே 2017 (04:50 IST)
சென்னையில் நேற்று இரவு முக்கிய சாலைகளில் திடீரென எண்ணெய் படலங்கள் பரவியதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.





பொதுவாக சாலைகளில் எண்ணெய்ப்படலங்கள் இருந்தால் மழை பெய்யும்போது அது தானாகவே அகன்றுவிடும். ஆனால் நேற்றிரவு சென்னையின் பல இடங்களில் மழை பெய்தது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக மழை நின்றவுடன் சாலைகளில் எண்ணெய்ப்படலங்கள் அதிகளவு காணப்பட்டது. குறிப்பாக சென்னை கோடம்பாக்கம் முதல் வடபழனி வரையுள்ள சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, மற்றும் நகரத்தில் இருக்கும் பல்வேறு சாலைகளில் எண்ணெய் படலம் காணப்பட்டது

இதை கவனிக்காத இருசக்கர வாகன ஓட்டிகள் திடீர் திடீரென வழுக்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்த போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். பின்னர்  சாலைகளில் மணல் கொட்டும் பணியும் நடைபெற்றது. சென்னை சாலைகளில் திடீரென எண்ணெய்ப்படலம் ஏற்பட என்ன காரணம் என்று தெரியவில்லை

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments