Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 லட்சம் பத்தாது.. 16 லட்சம் குடுங்க! – கொரோனா நோயாளியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (08:39 IST)
சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளியிடம் 16 லட்சம் மருத்துவ கட்டணம் கேட்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியில் வசித்துவரும் மகேந்திரன் என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு மொத்தமாக ரூ.5 லட்சம் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் கூற, மனோகரனின் குடும்பத்தினரும் பணத்தை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன் நலம் பெற்றுள்ளதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு இதயத்தில் ஏதோ பிரச்சினை இருப்பதாக கூறி வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறியிருக்கிறார்கள்.

மேலும் மீதமுள்ள சிகிச்சை கட்டணம் 11 லட்சத்தை கட்டுமாறு கூறியுள்ளார்கள். இதனால் மனோகரன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் 5 லட்சம்தானே சொன்னீர்கள் என கேட்க அதற்கு தனியார் மருத்துவமனை சரியான விளக்கத்தை அளிக்காமல் பணத்தை கட்ட வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனோகரனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments