Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு பூஜைன்னு சொல்லி சிறுமியிடம் சில்மிஷம்! – எஸ்கேப் ஆன சாமியாருக்கு வலைவீச்சு!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (12:15 IST)
சென்னை மதுரவாயல் அருகே பரிகார பூஜை செய்வதாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த கந்தசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். அந்த கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

அந்த பெண்ணிடம் சிறுமிக்கு தோஷம் இருப்பதாகவும், அது நீங்க தனது வீட்டில் தங்கி சிறப்பு பூஜை செய்ய வேண்டுமென்றும் பூசாரி கூறியுள்ளார். அதை நம்பிய சிறுமியின் பெற்றோர் பூசாரி சந்திரசேகரின் வீட்டில் சென்று சில நாட்கள் தங்கியுள்ளனர்.

அங்கு பூஜை செய்வதாக சிறுமியை தனியறைக்கு அழைத்து சென்ற பூசாரி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார், இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். ஆனால் சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பூசாரியை அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர்கள் தாக்கியதால் காயமடைந்த பூசாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார். தப்பியோடிய பூசாரியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெர்மனி அதிபர் ஒரு திறமையற்ற முட்டாள்.. ஜனநாயகத்திற்கு எதிரான கொடுங்கோலன்.. எலான் மஸ்க்

ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்.. சிறப்பு ஏற்பாடுகளை செய்த பிர்லா கோளரங்கம்..!

பரந்தூரை அடுத்து வேங்கை வேல் செல்கிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அதானி மகனுக்கு எளிமையான திருமணம்.. ஒரு சில லட்சங்கள் மட்டுமே செலவா?

தமிழகத்தில் பதுங்கி இருக்கும் வங்கதேசத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை..!

அடுத்த கட்டுரையில்