Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ரவுடி மீது காவல்துறை துப்பாக்கி சூடு.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு..

Siva
வியாழன், 16 ஜனவரி 2025 (08:41 IST)
சென்னை எம்கேபி நகரில் காவல்துறையினர் பிரபல ரவுடி மீது துப்பாக்கியால் சுட்டு கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக ரவுடி ஒழிப்பு போலீசார் ரவுடிகளை கைது செய்து வரும் நிலையில், பிரபல ரவுடி பாம் சரவணன் என்பவர் எம்கேபி நகரில் உள்ள ஒரு குடோனில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் மீது பாம் சரவணன் நாட்டு வெடிகுண்டை வீசியதாகவும், அதில் ஒரு போலீஸ்  காயமடைந்ததாகவும் தெரிகிறது.

உடனே போலீசார் ரவுடியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ரவுடிக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவரை கைது செய்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளர் பாம் சரவணன் என்று கூறப்படுகிறது. இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 33 வழக்குகள் இருப்பதாகவும், கேகே நகர் போலீஸ் நிலையத்தில் பிடிவாரண்ட் ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே புளியந்தோப்பு போலீசார் இவரை கைது செய்ய தேடி வந்த நிலையில், தற்போது சென்னை போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments