Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

Webdunia
வியாழன், 2 ஜூலை 2015 (01:57 IST)
திமுக தலைவர் கருணாநிதிக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் நடத்த சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
 

 
சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். ஆனால், மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழகத்திற்கு முதன்முதலில் கொண்டு வந்தது திமுக தலைவர் கருணாநிதி தான்.
 
எனவே, கருணாநிதிக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் ஆலந்தூர் நீதிமன்றம் எதிரே உள்ள மைதானத்தில் நடத்த ஆலந்தூர் பகுதி திமுக முடிவு செய்தது.
 
இதற்கான அனுமதியை அப்பகுதி திமுக செயலாளர் சந்திரன், பரங்கிமலை காவல் நிலையத்தில் மனுவாக அளித்து கேட்டார். ஆனால், இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது. இதனால் நீதி மன்ற உதவியைப் பெற்று பொதுக் கூட்டம் நடத்தப்படும் என திமுக தரப்பில் கூறப்படுகின்றது.
 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments