மீண்டும் ரூ.101ஐ தொட்ட பெட்ரோல் விலை!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (07:42 IST)
தமிழகத்தில் பெட்ரோல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் தமிழக பட்ஜெட்டில் குறைக்கப்பட்ட ரூபாய் மூன்றையும் தாண்டி நூறு ரூபாயை சமீபத்தில் பெட்ரோல் விலை தாண்டியது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் விலை 101 ரூபாயை கடந்து விட்டது என்பதும் டீசல் விலை 97 ரூபாயை நெருங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம். இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.01 என்ற விலையில் விற்பனையாகிறது என்பதும், அதேபோல் இன்று சென்னையில் டீசல் விலை இன்று 34 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.96.60 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments