தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை !

Webdunia
ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (08:16 IST)
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த இரு நாட்களாக மழை பெய்யாமல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

இதையடுத்து சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, வரும் நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாகத் தென் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அதிகமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் நாட்களில்,தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.’ எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 தோப்புக்கரணம் போட சொன்ன ஆசிரியர்.. பரிதாபமாக பலியான 6ஆம் வகுப்பு மாணவி..!

சவூதியில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற 42 இந்தியர்கள் பலி; அதிர்ச்சி தகவல்!

பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: இண்டி கூட்டணி உடைகிறதா?

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

பொங்கல் பண்டிக்கைக்காக டிசம்பர் 15 முதலே சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

அடுத்த கட்டுரையில்
Show comments