Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, 7 மாவட்டங்களில் மழை! வானிலை எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 26 செப்டம்பர் 2024 (15:38 IST)
அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை வருமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபடும் காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட ஏழு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments